திருப்பூரில் உள்ள பெரும்பாலான பின்னலாடை நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் கொடுத்துவிட்டனர். கடந்த வாரம் முதலே பொதுமக்கள் கடை வீதிகளில் பட்டாசு, துணிகள், வீட்டு உபயோகப்பொருள்கள் வாங்க குவிந்துவந்தனர்.
தீபாவளி பண்டிகை நாளை (நவ. 14) கொண்டாடப்படுகிறது. இதனால் இன்று (நவ. 13) முக்கியக் கடை வீதிகளில் பொதுமக்கள் குவிந்தனர்.
திருப்பூரில் உள்ள குமரன் சாலை உள்ளிட்ட முக்கியச் சாலைகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. கரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் கடந்த எட்டு மாதங்களாக வெளியே வராமல் இருந்தனர்.
அரசு ஊரடங்கில் தளர்வுகள் அளித்ததையடுத்து பொதுமக்கள் வெளியே வரத் தொடங்கினர். தற்போது தீபாவளி பண்டிகை என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வெளியே வந்து தங்களுக்குத் தேவையான துணிகள், பட்டாசு உள்ளிட்டவற்றை வாங்கினர்.
இதையும் படிங்க: தீபாவளி பண்டிகை: தோவாளை மலர் சந்தையில் பூ விலை உயர்வு!