ETV Bharat / state

கரோனாவால் பின்னலாடை துறையில் ரூ.10 ஆயிரம் கோடி பாதிப்பு - சீர்த்திருத்தம் மேற்கொள்ளுமா அரசு? - corona virus impact on tirupur knitwear export industries

திருப்பூர்: கரோனா பாதிப்பால் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பின்னலாடை துறையின் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், இப்பாதிப்பிலிருந்து மீள குறைந்தது ஓராண்டிற்கு மேல் ஆகும் எனவும் ஏற்றுமதியாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

tirupur knitwear export industries
tirupur knitwear export industries
author img

By

Published : Apr 16, 2020, 3:43 PM IST

Updated : Jun 2, 2020, 8:36 PM IST

பின்னலாடை துறையில் ஏற்றுமதியின் மூலம் ஆண்டிற்கு 26 ஆயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணி, உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியில் 18 ஆயிரம் கோடி ரூபாய் எனப் பின்னலாடை வர்த்தகத்தில் இந்தியாவின் முன்னோடி நகராக விளங்கிவந்த திருப்பூர், தற்பொழுது கரோனா பாதிப்பால் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் திருப்பூரிலிருந்து ஏற்றுமதிசெய்யப்பட்ட ஆறாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடை பொருள்கள் தற்போதுவரை ஐரோப்பிய, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலுள்ள துறைமுகங்களில் தேங்கி நிற்பதாலும், உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாலும் பின்னலாடைகளுக்கான தேவை 80 விழுக்காடு அளவுக்கு குறைந்து வரலாறு காணாத வகையில் வர்த்தகம் சரிந்துள்ளது.

இதன் காரணமாக அனுப்பப்பட்ட 6,000 கோடி ரூபாய் ஆர்டர்களுக்கான பணத்தைப் பெறுவதிலும் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. கடைகள் அனைத்தும் மூடப்பட்டு விற்பனையே இல்லாமால் போனதால், கொடுத்த ஆர்டர்களை சில வெளிநாட்டு நிறுவனங்கள் ரத்துசெய்துள்ளன.

அதேபோல் திருப்பூரில் மேற்கொள்ளப்பட்டுவந்த பணிகளை நிறுத்த வேண்டும் எனவும், குறைவான பொருள்களை மட்டுமே அனுப்பினால்போதும் அதுவும் இரண்டு மாதங்களுக்குப் பிறகு அனுப்ப வேண்டும் எனவும் வெளிநாட்டு நிறுவனங்கள் கறராகக் கூறுவதாலும் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு தயார்செய்யப்பட்ட பின்னலாடை பொருள்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளதாகக் கவலை தெரிவிக்கின்றனர் அத்துறையைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள்.

இது தொடர்பாக ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம், “இதுபோன்ற சூழ்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் மீண்டும் உற்பத்தியைத் தொடங்கி இயல்புநிலைக்குத் திரும்ப ஆறு மாதம் முதல் ஒரு வருடம்வரை ஆகும் என சோகத்துடன் கூறுகிறார்கள்.

தற்போதுள்ள நெருக்கடியான சூழலில் உலக மக்கள் அனைவரும் உணவுப் பொருள்களுக்கும் மருத்துவப் பொருள்களுக்கும் அதிகப்படியாக செலவுசெய்கிறார்கள். ஒருவேளை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பினாலும் உணவுப் பொருள்களுக்கான தேவையே பிரதானமாக இருக்கும்.

ஆடைகள் நுகர்வு என்பது முற்றிலும் பாதிக்கப்படும். அந்தப் பாதிப்பு தொழில் துறை மட்டுமல்லாது, தொழிலாளர்களையும் பாதித்து வேலைவாய்ப்பின்மை போன்ற சங்கிலித் தொடராகப் பல்வேறு மறைமுக பாதிப்புகளை விளைவிக்கும்.

தொழிலாளர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ஆகியோருக்கு அரசு தொடர்ந்து நிதி வழங்குவது என்பது இயலாத காரியம். ஆகவே அரசானது தொழில் துறையை ஊக்குவித்தால் வேலைவாய்ப்பு பெருகுவதுடன் நாட்டின் பொருளாதாரமும் மேம்படும்.

தொழில் நிறுவனங்கள் வங்கிகளில் பெற்றுள்ள கடன்களுக்கு வட்டியைக் குறைப்பது, வட்டியில் மானியம் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்பட்சத்தில் வேலைவாய்ப்பின்மை அபாயத்தை நடக்காமல் இருக்கச் செய்யலாம்.

இதனைச் செயல்படுத்தினால் தொழில் நிறுவனங்களின் நிதிச்சுமை குறைய வாய்ப்பு ஏற்படும். அதேபோல புதிதாக மூலதன கடன் வழங்குவதன் மூலம் பின்னலாடை நிறுவனங்கள் தொடர்ந்து இயங்க வாய்ப்பு ஏற்படும்.

கரோனாவால் பின்னலாடை துறையில் ரூ.10 ஆயிரம் கோடி பாதிப்பு

இதுதவிர தொழிலாளர்கள் நலனுக்காகத் தொடங்கப்பட்ட இஎஸ்ஐ மூலம் தொழிலாளர்களுக்கு நிதி வழங்கி அரசு அவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்” என்றார்.

தங்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டால் பெரும் விபரீதத்திலிருந்து மாநிலத்தைக் காப்பாற்றலாம் எனவும் ஏற்றுமதியாளர்கள் எச்சரிக்கைவிடுக்கின்றனர்.

இதையும் படிங்க: ஊரடங்கு காலத்தில் வாழ வழி செய்யுமா அரசு? - கண்ணீரில் தவிக்கும் வாழை விவசாயிகள்

Last Updated : Jun 2, 2020, 8:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.