திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகள் மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் நேர்வதோடு, வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர்.
இதை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றும் இதுவரை நடவடிக்கை எடுக்காததை சுட்டிக்காட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருப்பூர் குமரன் சாலையில் உள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
அதன் பேரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தை திரும்பப் பெற்றனர். உடனடியாக சாலைகளை சரி செய்யாவிட்டால் திருப்பூரில் அனைத்து பகுதிகளிலும் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:என்டிசி ஆலைகளைத் திறக்க வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டம்