டெல்லியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ந்து ஒன்பதாவது நாளாக விவசாயிகள் போராடிவருகின்றனர். இந்தப் போராட்டத்திற்குப் பல்வேறு அமைப்பினர், கட்சியினர் ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பாக கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. டவுன்ஹால் சாலையிலிருந்து ஊர்வலமாக வந்த இடதுசாரி கட்சியினர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றபோது காவல் துறையினருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனையடுத்து திருப்பூர் குமரன் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினரை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைதுசெய்தனர். போராட்டத்தில் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.