திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே புக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரது மனைவி கவுசல்யா, மகள் பிரபாவதி (கல்லூரி மாணவி) ஆகியோர் இன்று காலை 6 மணியளவில் உடுமலை புக்குளம் சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் சாலையில் அவர்களுக்கு பின்னே அதிவேகமாக வந்த மினி வேன் மூவரின் மீதும் வேகமாக மோதியதில் தூக்கியெறியபட்டனர். மூவரையும் அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி பிரபாவதி இறந்துபோக அவரின் தாய் தந்தை இருவரும் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைகாக அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: விளையாட்டால் விபரீதம்: கத்தியால் குத்தி பழ வியாபாரி கொலை