திருப்பூர் நொய்யல் ஆற்றின் வளம் பாலம் அருகே இன்று காலை கார் ஒன்று நொய்யல் ஆற்றின் கரையோரம் கண்ணாடி உடைந்த நிலையில் கிடந்துள்ளது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாகக் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அப்பகுதி மக்களிடம் விசாரித்ததில், இரவு 12 மணியளவில் இந்த கார் நிலைத்தடுமாறி ஆற்றின் கரையில் சரிந்து விழுந்ததாகவும், காரின் உரிமையாளர் அதனை வெளியே எடுக்க முயற்சி செய்து, எடுக்க முடியாததால் அங்கிருந்து சென்று விட்டதாகவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், காரின் உரிமையாளர் யார், குடிபோதையில் காரை பள்ளத்தில் இறக்கினாரா உள்ளிட்ட கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பெயர் பலகை கம்பத்தில் மோதி விபத்து: கேரள இளைஞர்கள் உயிரிழப்பு