ETV Bharat / state

தாறுமாறாக ஓடிய கார்! அதிர்ஷ்டவசமாக பலர் உயிர் பிழைப்பு - Palladam-Tirupur road

திருப்பூர்: பல்லடம்-திருப்பூர் சாலையில் இரண்டு கார்கள், நான்கு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது. அதில் ஒரு கார் பேக்கரிக்குள் பாய்ந்து அப்பளம் போல் நொறுங்கியது.

பேக்கரியில் பாய்ந்த காா்
author img

By

Published : Jun 14, 2019, 1:37 PM IST

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம்-திருப்பூர் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது டொயோட்டோ எட்டியாஸ் நிறுவனத்தின் சோதனையோட்டக் கார் ஒன்று மோதியது. மோதிய வேகத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திசைமாறி தாறுமாறாக ஓடிய டொயோட்டோ எட்டியாஸ் கார் சாலையோரம் நின்றுகொண்டிருந்த ஆம்னி வேன், நான்கு இருசக்கர வாகனங்கள் மீதும் சரமாரியாக மோதியது.

இதையடுத்தும், நிற்காது வேகமாய் சென்ற கார் அங்கிருந்த பேக்கரி கடைக்குள் கண்ணிமைக்கும் நேரத்தில் புகுந்து அப்பளம் போல் நொறுங்கியது. அப்போது, காரின் பாதுகாப்புக்காக உள்ள பலூன் வெளியானதால் அதனை ஓட்டிவந்த சுப்பிரமணியம் (37), உடனிருந்த பாலமுருகன் (25) ஆகிய இருவரும் உயிர் தப்பினர். இந்த விபத்தில் பேக்கரி கடையில் பணியாற்றிய ரத்தினசாமி (29) என்பரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

பேக்கரியில் பாய்ந்த கார்

மேலும் பேக்கரி கடை முன்பாக வாகனங்களை நிறுத்திவிட்டு அமர்ந்திருந்த பத்துக்கும் மேற்பட்டோரும் உயிர் தப்பினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிப்படைந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த பல்லடம் காவல் துறையினர் போக்குவரத்தை சீர் செய்தனர். இச்சம்பவத்தால் பல்லடம்-திருப்பூர் சாலையில் பெரும் பரபரப்பு நிலவியது.

Intro:திருப்பூர் அருகே இரண்டு கார்கள் நான்கு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து-பேக்கரிக்கடைக்குள் கார்பாய்ந்து பத்துக்கும் மேற்ப்பட்டோர் உயிர்தப்பினர் !
போக்குவரத்து பாதிப்பு-போலீசார் விசாரணை.

Body:திருப்பூர்மாவட்டம் பல்லடம்-திருப்பூர் சாலை மகாலட்சுமி நகரில் இன்று சாலையைக் கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது மோதிய டொயோட்டா எட்டியாஸ் நிறுவனத்தின் சோதனை ஓட்டக் கார் ஒன்று அதன் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் நின்று கொண்டிருந்த ஆம்னிவேன் மற்றும் நான்கு இருசக்கர வாகனங்கள் மீதும் மோதி பின்னர் பேக்கரிக்கடைக்குள் புகுந்து விபத்து ஏற்பட்டது.இதில் எட்டியாஸ் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கி பலூன் வெளியானதால் அதனை ஓட்டிவந்த சுப்பிரமணியம் 37, பாலமுருகன்25 ஆகிய இருவரும் பேக்கரிகடையில் பணியாற்றிய ரத்தினசாமி 29 என்பரவதும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்
.மேலும் கடை முன்பாக வாகனங்களை நிறுத்திவிட்டு அமர்ந்திருந்த மேலும் பத்துப்பேரும் உயிர்தப்பினர். இச்சம்பவதம் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிப்படைந்தது.இது குறித்து தகவலறிந்து சம்பவ இடம் விரைந்து வந்த பல்லடம் போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.இச்சம்பவத்தால் பல்லடம்-திருப்பூர் சாலையில் பரபரப்பு ஏற்ப்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.