உடுமலைப்பேட்டை அருகில் உள்ள மடத்துக்குளம் பகுதியில் பெரும்பாலான பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் செல்லாமல் வெளியே நின்று பயணிகளை ஏற்றுவதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்
உடுமலைப்பேட்டையிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மடத்துக்குளம் கிராமம்.
உடுமலை-பழனி பிரதான சாலையில் அமைந்துள்ளதால், இது முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இதனால், எந்நேரமும் இங்கு வாகனம் வருவதும் செல்வதுமாக இருக்கும்.
இந்நிலையில், மடத்துக்குளம் பேருந்து நிலையம் வரும் அரசு, தனியார் பேருந்து நிலையத்தில் உள்ளே செல்லாமல் வெளியிலே நின்று பயணிகளை ஏற்றி வருகிறது.
இதனால், பயணிகள் நிழற்குடையில் நிற்கமுடியாமல் வெயிலில் நின்று பேருந்துக்காக காத்திருக்கின்றனர். இதுதவிர, அது பிரதான சாலை என்பதால் பேருந்துகளில் நின்று செல்வது கடும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகிறது.
எனவே, இங்கு வரும் அனைத்துப் பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லவேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.