ETV Bharat / state

ஆம்னி வேனின் டயர் வெடித்து அக்கா, தம்பி உயிரிழப்பு! - tiruppur district news

திருப்பூர்: பெரும்பாளி அருகே சென்றுகொண்டிருந்த ஆம்னி வேனின் டயர் வெடித்ததில் அக்கா, தம்பி உயிரிழந்தனர்.

விபத்து
விபத்து
author img

By

Published : Sep 24, 2020, 8:48 PM IST

திருப்பூர் கொங்கணகிரி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (42). இவரது மனைவி தாமரை செல்வி (45). இவர்கள் இருவரும் பனியன் நிறுவனத்தில் பணியாற்றிவந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தாமரை செல்விக்கு உடல் நலக்குறைவு ஏற்படவே கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து இன்று (செப். 24) திருப்பூரில் உள்ள வீட்டிற்கு தனது சகோதரருடைய ஆம்னி வேனில் தனது கணவர் ஜெயராஜுடன் சென்றுகொண்டிருந்தார். காரை அவரது சகோதரர் ரன்னர் ஓட்டி சென்றார். இதற்கிடையில் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெரும்பாளி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென வேனின் டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த ரன்னர், எதிரே கேரளா நோக்கிச் சென்றுகொண்டிருந்த டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதினார்.

இந்தக் கோர விபத்தில் ஆம்னி வேன் அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் இடிபாடுகளுக்கிடையே ஆம்னி வேனிலிருந்த மூவரும் சிக்கி உயிருக்குப் போராடினர். இதைக்கண்டு அருகில் இருந்தவர்கள் உடனே மூவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ஆம்னி வேனின் டயர் வெடித்து அக்கா, தம்பி உயிரிழப்பு

இருப்பினும் மருத்துவமனையிலேயே தாமரை செல்வி, அவரது சகோதரர் உயிரிழந்தனர். ஜெயராஜ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். இந்த விபத்து காரணமாக கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் இவ்விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இவ்விபத்தில் அக்கா, தம்பி இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பாஜக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.