ETV Bharat / state

ஆட்சி மொழியாக தமிழ் ஒலிக்கும் காலத்திலே தமிழர்களின் கனவு நிறைவேறும்: வைரமுத்து - vaiaramuthu news

திருப்பூர்: நாடாளுமன்றத்தில் தமிழ் ஆட்சி மொழியாக ஒலிக்கும் காலத்திலே தமிழர்களின் கனவு நிறைவேறும் என, தமிழாற்றுப்படை நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து
author img

By

Published : Aug 29, 2019, 12:35 AM IST

கவிஞர் வைரமுத்துவின் தமிழாற்றுப்படை என்ற நூல் வெளியீட்டு விழா திருப்பூரில் நடைபெற்றது. அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த கவிஞர் வைரமுத்து பேசியதாவது,

"நான் ஒரு கருவி மட்டும்தான். இந்தக்கருவியின் வழியாக மூவாயிரம் ஆண்டுத் தமிழ் இந்நூல் வாயிலாக பாய்ந்திருக்கிறது. தமிழர்களும், தமிழர் அல்லாதவர்களும் தமிழ் ஏன் பயில வேண்டும் என்பதற்கும் இந்தியப் பண்பாடு என்பது சமஸ்கிருதத்தால் ஆக்கப்பட்டதா? தமிழால் ஆக்கப்பட்டதா? என்ற கேள்விக்கும் விடைதருகிறது. தமிழர்கள் ஞானச் செல்வத்தை மூலத்திலிருந்து பெற்றார்களா? அல்லது நகலில் இருந்து பெற்றார்களா? என்ற கேள்விக்கும் இப்புத்தகம் விடைதருகிறது.

இன்றைய நவீன உலகத்தில் வாழ்கிற கணிப்பொறி தலைமுறை தமிழை ஏன் தங்கள் சொத்தாக கொள்ளவேண்டும், ஏன் வாழ்வியல் மொழியாக கொண்டாட வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது. தமிழாற்றுப்படை என்பது வெறும் புத்தகமல்ல. ஒரு ஞானப்பேழை. அந்தப்பேழை தமிழ்மொழி தனக்கு அளித்தது என்று அவர் பெருமிதம் கொண்டார்.

மேலும் பேசிய அவர், நாடாளுமன்றத்தில் என்றைக்கு தமிழ் ஆட்சி மொழியாக ஒலிக்கப்படுகிறதோ அந்தக்காலமே தமிழர்களின் கனவு நிறைவேறும் காலம் என்றார். தமிழாற்றுப்படை நூலிற்காகவே திரையுலகில் பல வாய்ப்புகளை நிராகரித்துவந்தேன். தற்போது நூலிண் பணிகள் முடிவடைந்த நிலையில் மீண்டும் திரைப்பட பாடல்கள் எழுதும் பணியைத் துவங்கியுள்ளேன் என்றார். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் காவியத்திற்கு மணிரத்னம், ஏ.ஆர். ரஹ்மான், வைரமுத்து கூட்டணியின் வாயிலாக பன்னிரெண்டாம் நூற்றாண்டுக்கான தமிழ் செழுமை கொழிக்கும் பாடல் வரிகள் விரைவில் உங்களை வந்தடையும் என அவர் கூறியுள்ளார்.

நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து

Intro:நாடாளுமன்றத்தில் தமிழ் ஆட்சி மொழியாக ஒலிக்கின்ற காலமே தமிழர்களின் கனவு நிறைவேறும் என்ற காலம் என கவிஞர் வைரமுத்து பேட்டி.

Body:கடந்த 4 ஆண்டுகளாக பத்திரிகைகளில் வெளியாகி வந்த கட்டுரைகளை தொகுத்து தமிழாற்றுப்படை என்ற நூலாக கவிஞர் வைரமுத்து வெளிவந்த நூல் அறிமுக விழா திருப்பூரில் இன்று நடந்தது இதில் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கலந்து கொண்டு நூலின் அறிமுக உரையாற்றினார் நிகழ்ச்சி அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கவிஞர் வைரமுத்து நாடாளுமன்றத்தில் ஆட்சி மொழியாக தமிழ் ஒலிக்கின்ற காலமே தமிழர்களின் கனவு நிறைவேறி என்ற காலம் என தான் நம்புவதாகவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையில் பாடல்கள் எழுத ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவித்த அவர் பல ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் கல்கியின் மாபெரும் படைப்பான பொன்னியின் செல்வன் காவியத்தை படமாக்க மணிரத்னம் இயக்க உள்ளதாகவும் அந்த படத்தில் இரண்டு பாடல்கள் எழுத ஒப்பந்தமாகியுள்ளதாக இயக்குனர் மணிரத்தினம் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் பாடல் ஆசிரியராக வைரமுத்துவும் மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு இணைந்துள்ள படமாக இந்தப் படம் இருக்கும் எனவும் தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.