ETV Bharat / state

‘காங்கிரஸ் ஆட்சி கவிழப்போகிறது’ -பாஜக மூத்த தலைவர்!

author img

By

Published : Feb 21, 2021, 12:26 PM IST

திருப்பூர்: இந்தியாவின் தென்பகுதியில் இருந்த ஒரே ஒரு காங்கிரஸ் ஆட்சியும் கவிழக்கூடிய சூழ்நிலையில் உள்ளது. ராகுல் காந்தி வந்து சென்ற ராசியாகக்கூட இருக்கலாம் என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் விமர்சித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்

சட்டப்பேரவை தேர்தல் பரப்புரை, பொதுக்கூட்டம், அரசின் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி வருகிற பிப்.25ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார். இந்த சூழலில் அதற்காக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன் கலந்துகொண்டார்.

இதையடுத்து, திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர். “இந்தியாவின் தென்பகுதியில் (புதுச்சேரி) இருந்த ஒரே ஒரு காங்கிரஸ் ஆட்சியும் கவிழக்கூடிய சூழலில் உள்ளது. ராகுல்காந்தி வந்து சென்ற ராசியாகக்கூட இருக்கலாம். தேர்தல் நேரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருக்கிறது என்றால் தவிர்க்க முடியாததாக இருந்திருக்கலாம்.

காங்கிரஸ் ஆட்சி விட்டுச் சென்ற கடனை அடைப்பதற்காக மக்களிடம் வரி வசூலிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பெட்ரோலை ஜிஎஸ்டி என்ற ஒற்றை வரிக்குள் கொண்டு வரும்பட்சத்தில் விலை குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. விரைவில் விலை உயர்வை குறைக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பார்.

மேலும், தமிழ்நாட்டில் பாஜக, அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதை சிம்பாலிக்காக உணர்த்துவதற்காகதான் முதலமைச்சர் , துணை முதலமைச்சர் கரங்களை உயர்த்தி பிடித்து பிரதமர் மோடி காண்பித்தார். சிறையிலிருந்து திரும்பிய சசிகலாவை தமிழ்நாடு மக்கள் வரவேற்கவில்லை, அமமுக கட்சியினர் மட்டுமே வரவேற்றனர்.

இதனை ஊடகங்கள் பெரிதாக காட்டுகின்றனர். அரசு அலுவலகங்களில் கோப்புகளில் ஆங்கிலம் கலக்காமல் தமிழில் எழுத வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டதற்கு தமிழ்நாடு அரசை பாராட்டுவதாகவும், நாளை தாய்மொழி தினத்தில் தமிழர்கள் தமிழில் கையெழுத்திடுவதையும், தமிழ் மொழியில் பேசுவதையும் உறுதிமொழியாக எடுத்துக்கொள்ள வேண்டும்” எனவும் கோரிக்கை வைத்தார்.

இதையும் படிங்க: ‘பாஜக கூட்டணிக்கு தேவேந்திர குல வேளாளர் வாக்கு கிடைக்காது’ - கிருஷ்ணசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.