ETV Bharat / state

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கரோனா உறுதி! - கரோனோ தொற்று

திருப்பூர்: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

BJP National Executive Committee member C.P. Radhakrishnan tested positive in Corono

author img

By

Published : Sep 16, 2020, 12:16 PM IST

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் கரோனாவின் தாக்கம் சற்று அதிக அளவில் உள்ளது.

மாநிலத்தில் நாள்தோறும் ஐந்தாயிரம் முதல் ஆறாயிரம் பேர் வரை, இந்த நோய்த்தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். இதனைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே திருப்பூரில் வசித்து வரும், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி. ராதாகிருஷ்ணன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது இன்று(செப்.16) உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து இவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது குடும்ப உறுப்பினருக்கும் தற்போது கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.