ETV Bharat / state

வண்டி சீட்டை உடைத்து ரூ. 3 லட்சம் கொள்ளை; பட்டப்பகலில் துணிகரம்!

திருப்பூர்: மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் இரு சக்கர வாகனத்தின் சீட்டை உடைத்து மூன்று லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

bike
author img

By

Published : Jul 26, 2019, 11:55 PM IST

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தனியார் நுால் மில்லில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருபவர், கார்த்திக் (வயது 25). இவர் நேற்று திருப்பூர் ரோட்டிலுள்ள வங்கியில், மூன்று லட்சம் ரூபாய் பணம் எடுத்துக்கொண்டு, பசுபதி வீதியிலுள்ள பிளாஸ்டிக் கடைக்கு வந்துள்ளார்.

இவர் ஓட்டி வந்த ஸ்கூட்டியின் சீட்டிற்கு கீழ் பணத்தைவைத்து, பூட்டிவிட்டு கடைக்குள் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது, சீட்டுக்கு அடியில் தான் வைத்துவிட்டுச் சென்ற பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

வண்டி சீட்டை உடைத்து ரூ. 3 லட்சம் கொள்ளை

இது குறித்து உடுமலை போலீசாரிடம் அவர் புகார் தெரிவித்ததையடுத்து, சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, நான்கு பேர் கார்த்திக்கை பின் தொடர்ந்து வந்ததும், பணத்தை திருடிச்சென்றதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்கள் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலையில், மூன்று லட்சம் ரூபாய் பணத்தை இவர்கள் லாவகமாகத் திருடிய சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Intro:Body:உடுமலையில் பின் தொடர்ந்து வந்து பைக்கில் வைத்திருந்த ரூ.3 லட்சம் பணத்தை லாவகமாக திருடிய திருடர்கள்

சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து உடுமலை போலீசார் விசாரணை..

திருப்பூர் மாவட்டம்உடுமலை அருகேயுள்ள குருவப்பநாயக்கனுாரிலுள்ள, தனியார் நுால் மில்லில் மேற்பார்வையாளராக உள்ளவர், கார்த்திக்,25. நேற்று, திருப்பூர் ரோட்டிலுள்ள வங்கியில், மூன்று லட்சம் ரூபாய் பணம் எடுத்துக்கொண்டு, பசுபதி வீதியிலுள்ள பிளாஸ்டிக் கடைக்கு வந்துள்ளார்.

ஸ்கூட்டியின் சீட்டிற்கு கீழ் பணத்தை வைத்து, பூட்டிவிட்டு கடைக்குள் சென்றுள்ளார். திரும்ப வந்து பார்த்த போது, சீட்டை உடைத்து, உள்ளிருந்த பணம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இது குறித்து உடுமலை போலீசாரிடம் புகார் தெரிவித்தார்

போலீசார் வந்து, விசாரணை நடத்தியதோடு, பசுபதி வீதி, திருப்பூர் ரோட்டிலிருந்த, கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது, நான்கு பேர், கார்த்திக்கை பின் தொடர்ந்து வந்ததும், பணத்தை திருடியதும் தெரிந்தது. இதை தொடர்ந்து அவர்கள் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்

மக்கள் நடமாட்டம் மிகுந்த ரோட்டில், மூன்று லட்சம் ரூபாய் பணத்தை பின் தொடர்ந்து வந்து லாவகமாகதிருடிய சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.