தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் திருப்பூர் கோல்டன் நகரில் குடும்பத்துடன் வசித்துவருகிறார். இவர் ஊத்துக்குளியில் உள்ள தனியார் வணிக நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார்.
இன்று காலை வழக்கம்போல் தன் வீட்டிலிருந்து கிளம்பி நிறுவனத்திற்கு செல்வதற்காக சங்கீதா தியேட்டர் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியே சென்ற லாரி மீது நிலைதடுமாறி மோதியதில் லாரியின் சக்கரம் தலை மீது ஏறி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அரசுப் பேருந்து - கேஸ் சிலிண்டர் லாரி மோதி விபத்து!