திருப்பூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான ஆட்டோ ஓட்டுனர்கள் இருக்கின்றனர். அவர்களில் 2000 பேர் மட்டுமே நலவாரியத்தில் பதிவு செய்துள்ளதால், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள முறைசாரா தொழிலாளர்களுக்கான நிவாரணம் அவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது.
இதனால் ஆட்டோ ஓட்டுனர் பொது நல சங்கத்தின் சார்பாக மீதம் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கும், தமிழ்நாடு அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் , ஊரடங்கு காலத்தில் ஆட்டோ ஓடாததால் தற்போது உணவுக்கே வழி இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது, எனவே விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
இதையும் படிங்க: மீனவர் குடும்பங்களுக்கு ரூ. 5,000 மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படும் - ஜெயக்குமார்