ETV Bharat / state

ரயில் இயக்கப்படுவதாகக் கூறி அலைக்கழிக்கப்பட்ட அஸ்ஸாம் தொழிலாளர்கள் - assam people informed about special trains and made to roam

திருப்பூர்: சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகக் கூறி காவல்துறையினர் அலைக்கழிக்கப்பட்டதால் அஸ்ஸாம் மாநிலத் தொழிலாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

assam people informed about special trains and made to roam

author img

By

Published : May 30, 2020, 6:46 PM IST

திருப்பூரில் தங்கி பணிபுரிந்து வந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஊரடங்கு காரணமாக தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல விருப்பம் தெரிவித்ததால், இணையம் மூலம் பதிவு செய்யப்பட்டவர்கள் சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

assam people informed about special trains and made to roam
அலைக்கழிக்கப்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள்

இந்நிலையில், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக காலை மூன்று மணிக்கே காவல்துறையினர் ரயில் நிலையம் வரவழைத்துள்ளனர். இதனை நம்பி ரயில் நிலையம் வந்த அஸ்ஸாம் தொழிலாளர்களிடம் இன்று சிறப்பு ரயில் இயக்கப்படாது என்று கூறி காவல்துறையினர் திருப்பி அனுப்பி உள்ளனர்.

இதனால் ஏமாற்றம் அடைந்த தொழிலாளர்கள், அரிசி கடை வீதியில் உள்ள பழனியம்மாள் மாநகராட்சி பள்ளிக்குச் சென்றனர். டோக்கன் தருவதாக வரவழைத்துவிட்டு தற்போது அலுவலர்கள் தங்களை அலைக்கழிப்பதாகவும், காலை 3 மணியிலிருந்து காத்திருக்கும் தங்களுக்கு உணவையும் ஏற்பாடு செய்து தரவில்லை என தெரிவித்தனர். மேலும் எப்போது ரயில் இயக்கப்படும் எனவும் தெரிவிக்காமல் அலைக்கழிப்பதாகக் குற்றஞ்சாட்டினர்.

இதையும் படிங்க... ஆந்திரா தொழிலாளர்கள் உணவின்றி தவிப்பு: சொந்த ஊருக்கு அனுப்புமா அரசு?

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.