ETV Bharat / state

மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்! - மத்திய அரசைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்: மத்திய அரசை கண்டித்தும், 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பாக 200 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பாக ஆர்ப்பாட்டம்!
Tiruppur all trade unions make protest
author img

By

Published : Aug 8, 2020, 6:49 PM IST

திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பாக மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் குமரன் சிலை அருகே சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎஃப், எம்எல்எப் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில், மத்திய அரசு தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தக்கூடாது, ஊரடங்கு காலத்தை கருத்தில் கொண்டு குறைந்த தொழிலாளர்களுக்கு போதுமான நிதி உதவி வழங்க வேண்டும், ஆதார் அட்டை வைத்துள்ள அனைத்து தொழிலாளர் குடும்பங்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆறு மாத காலத்திற்கு ரேஷன் கடைகளில் இலவச உணவு பொருள்கள் விநியோகிக்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

மேலும், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் முழுவதும் 200 மையங்களில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.