தெலங்கானா மாநிலத்தில், ஒன்பது மாத பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது. இதனைக் கண்டித்து திருப்பூர் மாநகராட்சி முன்பு அனைத்துக் கல்லூரி மாணவ - மாணவிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களுக்கு தண்டனைகளை கடுமையாக்கக் கோரியும், பாலியல் வன்புணர்வு குற்றவாளிகள் அனைவருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், பாலியல் வன்முறைக்கு நாடு முழுவதும் தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும் எனவும், விசாகா தீர்பின்படி மனரீதியான பாலியல் வன்கொடுமையையும் குற்றசெயலாக கருதி இந்திய தண்டனை சட்டத்தில் சேர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த ஆர்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் கலந்துகொண்டனர்.