தேமுதிக நிறுவனர் தலைவர் விஜயகாந்தின் நண்பரான திருப்பூரைச் சேர்ந்த லிங்க்ஸ் சவுகத் அலி இன்று உயிரிழந்தார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது இளைய மகன் சண்முக பாண்டியன் திருப்பூருக்கு வந்து நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் பிரேமலதா செய்தியாளர்களிடம் பேசியபோது, லிங்க்ஸின் மறைவு விஜயகாந்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்றார். பின்னர் இடைத்தேர்தல் குறித்து அவரிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தேமுதிக ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இருப்பினும் தற்போது தேதி மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், அதிமுகவினர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து ஆலோசனை மேற்கொள்வர் அதற்கு பின்பு எங்களது முடிவினை அறிவிப்போம் என்றார்.