ETV Bharat / state

திமுகவுக்கு சவுக்கடி...! 2021இல் நாங்கள்தான்...! சூளுரைக்கும் முன்னாள் அமைச்சர்! - admk former minister msm Anandan

திருப்பூர்: திமுகவுக்கு சவுக்கடி கொடுக்கம் வகையில் அதிகப்படியான உறுப்பினர்களை கட்சியில் இணைத்து 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

admk membership admission camp  திருப்பூர் மாவட்டச் செய்திகள்  tiruppur district news  msm Anandan  admk former minister msm Anandan  tiruppur news today
திமுகவுக்கு சவுக்கடி...2021ல் நாங்கள்தான் சூளுரைக்கும் முன்னாள் அமைச்சர்
author img

By

Published : Aug 12, 2020, 7:05 PM IST

தமிழ்நாடு முழுவதும் அதிமுகவில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருப்பூரில் இளைஞர் இளம்பெண்கள் பாசறை, புரட்சித் தலைவி அம்மா பேரவை உள்ளிட்ட அணிகளுக்கான உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநகர மாவட்ட கழகச் செயலாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 12) நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுகவுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் கட்சியில் அதிகப்படியான இளைஞர்களை இணைத்து வரும் சட்டப்பேரைவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவோம். திருப்பூரிலுள்ள மூன்று தொகுதிகளிலும் சிறப்பாக செயல்பட்டு திருப்பூரை அதிமுகவின் கோட்டையாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எம்.எஸ்.எம். ஆனந்தன் பேட்டி

எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக இந்த நான்கரை ஆண்டு காலம் முதலமைச்சர் சிறப்பான முறையில் செயல்பட்டு கொண்டிருக்கிறார். முதலமைச்சரின் துரிதமான செயல்பாட்டால் தமிழ்நாட்டில் பொருளாதார இழப்பு இல்லை" என்றார்.

இதையும் படிங்க: அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார்? பதிலளிக்காமல் நழுவிச் சென்ற அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.