தமிழ்நாடு முதலமைச்சரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, ஐந்தாம் கட்ட தேர்தல் சுற்றுப்பயணமாக நாளை (பிப். 11) திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதற்காக திருப்பூர் வடக்கு, தெற்கு உள்ளிட்ட பகுதிகளில் அவரை வரவேற்று பிரமாண்ட விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த ரயில்வே மேம்பாலம், வளம் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் பாதசாரிகள் நடந்து செல்வதற்கான நடைமேடைகளை ஆக்கிரமித்து, அதிமுகவினர் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதால், பாதசாரிகள் சாலையில் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. வாகன போக்குவரத்து நிறைந்த பகுதியில் பாதசாரிகளும் சாலைகளில் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது என தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே கோவையில் ரகு, சென்னையில் சுபஸ்ரீ என்ற மாணவி பேனர் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் பேனர்கள் வைக்க நீதிமன்றம், மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ள சூழ்நிலையில், அவற்றையும் மீறி நடைபாதைகளில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர்களால் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க...ஸ்டாலினுக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய 2வது நோட்டீஸையும் ரத்துசெய்தது நீதிமன்றம்