ETV Bharat / state

அரசுப் பேருந்தை திருட முயற்சித்த பலே ஆசாமிக்கு காவல்துறையினர் வலை!

திருப்பூர்: அரசுப் பேருந்தைத் திருட முயற்சித்த அடையாளம் தெரியாத நபரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

அரசுப் பேருந்து
author img

By

Published : Aug 2, 2019, 3:16 PM IST

Updated : Aug 2, 2019, 5:15 PM IST

திருப்பூரில் இருந்து கீரனூர் வரை சென்ற அரசுப் பேருந்து ஒன்று, பயணிகளை இறக்கிவிட்டு திரும்புகையில் பேருந்தை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு ஓட்டுநரும், நடத்துனரும் அதே பகுதியில் உள்ள மண்டபம் ஒன்றில் படுத்து உறங்கினர். தாராபுரம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைக்குச் சொந்தமான இப்பேருந்தை அடையாளம் தெரியாத நபர் ஒருவர், திருடுவதற்கு திட்டமிட்டுள்ளார்.

இதையடுத்து, அரசுப் பேருந்தை அவர் ஒட்டிச் சென்றபோது, அவரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனை எதிர்பார்த்திடாத அந்த நபர், பேருந்தை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

இதற்கிடையே, மண்டபத்தில் கண் விழித்த பேருந்தின் ஓட்டுநரும், நடத்துனரும் பேருந்து மாயமாகியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அப்பகுதியில் தேடி பார்த்தபோது, ஒரு கிலோமீட்டர் தொலைவில் பள்ளத்தில் கவிழ்ந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து பேருந்தை பள்ளத்திலிருந்து மீட்டனர்.

பின்னர் இது குறித்து நடத்துனர், ஓட்டுநர் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அடையாளம் தெரியாத நபரை தேடி வருகின்றனர்.

Intro:அரசு பேருந்தை விற்பனை செய்ய திருடிய பலே திருடன். பேருந்தின் நிலை காரணமாக தொடர்ந்து இயக்கமுடியாமல் பள்ளத்தில் கவிழ்த்து விட்டு தப்பியோட்டம்.

Body:திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து தாராபுரத்தை அடுத்த திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் வரை3ஆம் நம்பர் அரசு நகர பேருந்து ஒன்று தினசரி இயக்கப்பட்டு வருகிறது ,வழக்கம் போல பேருந்தின் கடைசி ஹால்ட் டிரிப்
பேருந்தை கீரனூர் கிராமத்தில் நிறுத்திவிட்டு ஓட்டுனரும் நடத்துனரும் அங்குள்ள மண்டபம் ஒன்றில் படுத்து தூங்கிவிட்டு மறுநாள் அதிகாலை 3 மணிக்கு பேருந்தை எடுத்துக்கொண்டு தாராபுரம் வருவது வழக்கம்
வழக்கப்படி நேற்று இரவு தாராபுரத்தில் இருந்து சென்ற அரசு நகரப்பேருந்தை ஓட்டுனர் சிவகுமார் ஓட்டிச்செல்ல நடத்துனர் அமுதன் உடன் இருந்தார் பேருந்தை அங்குள்ள மண்டபம் ஒன்றின் முன் நிறுத்தி விட்டு ஓட்டுனரும் நடத்துனரும் உள்ளே சென்று உறங்கிவிட்டனர்
சந்தர்ப்பத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஒரு பலே திருடன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்தை நள்ளிரவில் கடத்திச் சென்று விற்பனை செய்யும் நோக்கத்துடன் நைசாக பேருந்தை ஓட்டிச் சென்றான் கீரனூரில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடிச் சென்றபோது அங்குள்ள அரசு உதவிபெறும் உண்டு உறைவிடப் பள்ளி அருகே அரசு பஸ் கட்டுப்பாட்டை இழந்ததால் மேற்கொண்டு ஓட்டிச் செல்ல முடியாமல் திணறி ய திருடன் அருகிலிருந்த சாலையோர பள்ளத்தில் பேருந்தை கவிழ்த்துவிட்டு தப்பி ஓடிவிட்டான்
அதிகாலை பேருந்தை இயக்குவதற்காக எழுந்த நடத்துனரும் ஓட்டுனரும் தாங்கள் நிறுத்தி வைத்த இடத்தில் இருந்து அரசு பேருந்தை காணாமல் பதறியடித்து தேடினர் அப்போது ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து கிடப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து பதட்டத்துடன் சம்பவம் குறித்து தாராபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை கிளை மேலாளர் வேலுச்சாமி இடம் தகவல் கூறினர் சம்பவ இடத்துக்கு சென்ற கிளை மேலாளர் பணிமனை குழுவினரும் ஜேசிபி எந்திரங்களை வரவழைத்து கவிழ்ந்த பேருந்து மீட்டு recovery வாகனம் மூலம் தாராபுரம் கொண்டு வந்தனர்
நிறுத்திவைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்தை நள்ளிரவில் துணிச்சலாக கடத்திச் சென்று விற்பனை செய்யும் என்ற முயன்ற பலே திருடன் குறித்து கீரனூர் போலீசில் தாராபுரம் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் வேலுச்சாமி புகார் அளித்துள்ளார்.Conclusion:
Last Updated : Aug 2, 2019, 5:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.