ETV Bharat / state

மதுபாட்டிலால் தகராறு: நண்பன் குத்திக்கொலை

திருப்பூர்: நண்பர்களுக்கு இடையே மது பாட்டிலால் ஏற்பட்ட தகராறில், ஒருவர் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை சம்பவம்
மது பாட்டில் தகராறு-கத்தியால் குத்தி கொலை!
author img

By

Published : May 1, 2021, 12:43 PM IST

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சின்ராசு என்பவர் திருப்பூர் பாண்டியன் நகர்ப் பகுதியில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து, தனது நண்பர்களுடன் அங்கு உள்ள அறையில் தங்கிவந்துள்ளார்.

இந்நிலையில் சனி, ஞாயிறு மதுக் கடைகள் விடுமுறை என்பதால் சின்ராஜ் தனது நண்பர் கண்ணனுடன் சேர்ந்து இரண்டு மதுபாட்டில்களை வாங்கி தனது அறையில் வைத்திருந்துள்ளார்.

கண்ணன் வெளியே சென்ற நிலையில் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு மதுபாட்டில்களைப் பத்திரமாக வைக்கக் கோரியுள்ளார். இதனைக் கேட்டவுடன் தங்கியிருந்த நண்பர் ராஜ்குமார், சின்ராசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதில் இருவருக்கு இடையே மோதல் முற்றிய நிலையில் ராஜ்குமார் கத்தியால் சின்ராசை குத்தியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து ராஜ்குமாரை கைதுசெய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: குடிக்க நீர் இல்லாததால் கரோனா நோயாளி உயிரிழப்பா? காணொலியால் சர்ச்சை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.