விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஒன்றியத்தில் அமைந்துள்ள வேலாயுதபுரம் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின்போது, அப்பகுதியில் வசித்துவரும் ராணி என்பவர் தான் வசித்து வரும் வீடு மிகவும் சேதமடைந்து உள்ளதால் தனக்கு உதவும் படி கேட்டுக் கொண்டார். மேலும், அவர் தனது மகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் அங்கு வசிப்பது ஆபத்தாக தோன்றுகிறது. அதிலும், மேற்கூரையில் போடப்பட்டுள்ள ஓடுகள் இறங்கியிருப்பதாலும், மழைக்காலங்களில் தண்ணீர் உள்ளே விழுவதாலும், உறங்க வழியின்றி தவிப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க : தஞ்சையில் தொடர்மழை.. 300 ஏக்கர் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்! - விவசாயிகள் வேதனை!
இதனைக் கேட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு உடனடியாக அவரது வீட்டிற்கு நேரில் சென்று பார்வையிட்டார். "அந்த வீட்டிற்குள் நுழைய இயலாதவாறு மிக குறுகிய வாசல் பகுதியே இருந்தது. இருப்பினும், உள்ளே சென்று பார்த்த அமைச்சர், மிகவும் தாழ்வான பகுதியில் இருப்பதால் தண்ணீர் தேங்குகிறது. இதுபோல வீடு இன்றி தவிக்கும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கலைஞர் கனவுத் திட்டத்தின் கீழ் உங்களுக்கு வீடு வழங்கும்படி பரிந்துரை செய்கிறேன்" என உறுதியளித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்