திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள ஈட்டிவீரம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் கூண்டு போடப்பட்ட லாரி ஒன்றில் 35 மாடுகளை ஏற்றிக்கொண்டு, ஆந்திர மாநிலத்திலிருந்து கேரளா நோக்கி லாரி ஒன்று சென்றது.
அப்போது அந்த வழியாக வந்த சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் முருக தினேஷ், தலைமையிலான நிர்வாகிகள் மாடுகளை ஏற்றிச் சென்ற லாரியை மடக்கிப்பிடித்து, பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து பெருமாநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரிடம் விசாரித்தபோது, லாரி ஓட்டுநர் வேலூரைச் சேர்ந்த நாகராஜ் (35) என்பதும், இவர் ஆந்திர மாநிலம் நகரியிலிருந்து 35 மாடுகளை இறைச்சிக்காக கேரள மாநிலத்திற்கு கடத்திச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த காவல்துறையினர், 35 மாடுகளையும் மீட்டு குன்னத்தூரில் உள்ள கோ சாலையில் ஒப்படைத்தனர். மேலும் சட்டவிரோதமாக மாடுகளை இறைச்சிக்காக கடத்தப்பட்ட குற்றத்திற்காக மிருகவதை தடைச்சட்டத்தின் கீழ் லாரி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:சினிமா பாணியில் திருடனை துரத்திப் பிடித்த சென்னை காவலர் - நெட்டிசன்கள் பாராட்டு