இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் விநாயகர் சதுர்த்தி அரசின் விதிமுறைகளை ஏற்று தகுந்த இடைவெளியுடன் எளிய முறையில் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதே வேளையில் அவரவர் இல்லங்களில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து தீபாராதனை காட்டி, விளக்கு ஏற்றி கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். மேலும் அவர்,"சீன ஆக்கிரமித்துள்ள பகுதிகளை இந்தியா வசம் கொண்டு வர வேண்டும். அதனை பாஜக அரசால் முடியும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மதுவிலக்கு கொண்டுவந்தால் மகளிரின் ஓட்டுகள் அதிகமுகவுக்கே கிடைக்கும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்