ETV Bharat / state

12ஆம் வகுப்பு மாணவிக்கு பெண் குழந்தை - 17 வயது சிறுவன் போக்ஸோ சட்டத்தில் கைது! - 17 வயது சிறுவன் கைது

திருப்பூர்: பல்லடம் அருகே வயிற்று வலிக்காக அனுமதிக்கப்பட்ட 12ஆம் வகுப்பு மாணவிக்கு பெண் குழந்தை பிறந்ததற்கு காரணமான 17 வயது சிறுவன் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

birth baby
author img

By

Published : Aug 31, 2019, 1:00 PM IST

திருப்பூர் மாவட்டம் வடுகபாளையத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி, வயிற்று வலி காரணமாக பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்ததில் கற்பமாக இருப்பது தெரியவந்தது. இந்தச் சூழலில் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு, நேற்று பெண் குழந்தை பிறந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மகளிர் காவல்துறையினர், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.

12ஆம் வகுப்பு மாணவிக்கு பெண் குழந்தை

அதில், 11ஆம் வகுப்பு படிக்கும் போது சக மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அந்த மாணவன் பன்னிரண்டாம் வகுப்பில் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்றுள்ளார். அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கத்தில் அப்பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். இதுபற்றி எதுவும் வெளியே சொல்லாமல் சிறுமி பள்ளிக்கு சென்று வந்துள்ளார். தற்போது, வயிற்று வலி ஏற்பட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அந்த சிறுமிக்கு பிரசவம் நடந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதற்கு காரணமான 17 வயது சிறுவனை கைது செய்த பல்லடம் மகளிர் காவல் துறையினர், போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிறுமி குழந்தையை பாதுகாக்க முடியாது என்பதனால், குழந்தையை காப்பகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். சிறுமிக்கு உரிய வயது வந்த பின்னர் குழந்தை ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:திருப்பூர் அருகே வயிற்று வலிக்காக அனுமதிக்கப்பட்ட பன்னிரண்டாம் வகுப்பு மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது விருப்பத்திற்கு காரணமான 17 வயது சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

Body:திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையில் வயிற்று வலி என சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 12ம் வகுப்பு மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது சக மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டது அது காதலாக மாறியது தெரியவந்துள்ளது இந்நிலையில் மாணவன் பன்னிரண்டாம் வகுப்பில் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்றுள்ளார் அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கத்தில் அப்பெண் கர்ப்பம் அடைந்துள்ளார் இதுபற்றி எதுவும் வெளியே சொல்லாமல் சிறுமி பள்ளிக்கு சென்று வந்துள்ளார் இந்நிலையில் வயிற்று வலி ஏற்படவே பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அந்த சிறுமிக்கு பிரசவம் நடந்துள்ளது இதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் இதற்கு காரணமான 17 வயது சிறுவனை கைது செய்த பல்லடம் மகளிர் காவல் துறையினர் சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர் சிறுமி குழந்தையை பாதுகாக்க முடியாது என குழந்தையை காப்பகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர் சிறுமிக்கு உரிய வயது வந்த பின்னர் குழந்தை ஒப்படைக்கப்படும்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.