ETV Bharat / state

+2 பொதுத்தேர்வு: திருப்பூரில் 1190 பேர் 'ஆப்சென்ட்' - 1190 பேர் ஆப்சென்ட்

திருப்பூர்: பொதுத்தேர்விற்கான தமிழ் முதல் தாள் தேர்வில் திருப்பூரில் 23 ஆயிரத்து 376 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 1190 பேர் தேர்வு எழுத வரவில்லை.

12th examination
12th examination
author img

By

Published : Mar 3, 2020, 9:53 AM IST

தமிழ்நாடு அரசுத் தேர்வுத் துறையால் நடத்தப்படும் +2 பொதுத்தேர்வு நேற்று (மார்ச் 2) தொடங்கியது. இதில், எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பொதுத்தேர்வை எழுதினர்.

அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்தில் 85 தேர்வு மையங்களில் 211 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 11 ஆயிரத்து82 மாணவர்கள், 13 ஆயிரத்து 527 மாணவிகள் என மொத்தம் 24 ஆயிரத்து 609 பேரும், தனித் தேர்வர்கள் 340 மாணவர்கள் உள்பட 24 ஆயிரத்து 949 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர்.

நேற்று நடந்த தமிழ் முதல்தாள் தேர்வை எழுத தனித்தேர்வர்கள் 117 பேர் உள்ளிட்ட 24 ஆயிரத்து 566 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 23 ஆயிரத்து 376 பேர் மட்டுமே தேர்வு எழுதினார்கள். 23 தனித்தேர்வர்கள் உள்ளிட்ட ஆயிரத்து 190 பேர் தேர்வு எழுதவில்லை. காயமடைந்தவர்கள், பார்வை மாற்றுத்திறனாளிகள், மனநலம் குன்றிய மாணவ, மாணவியர் ஆசிரியர்கள் உதவியுடன் தேர்வு எழுதினர்.

பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவியர்

தேர்வு தொடங்கிய முதல் நாளான நேற்று தேர்வு நடைபெறும் மையங்களுக்குள் வெளி நபர்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டிருந்தது. திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் திருப்பூர் ஆட்சியர் விஜயகார்த்திகேயன் திடீர் ஆய்வுசெய்தார்.

இதையும் படிங்க: மொத்தம் 14 ஆயிரத்து 962 மாணவர்கள் புதுச்சேரியில் தேர்வெழுதினர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.