திருப்பூர், தாராபுரம் சாலை கே. செட்டிபாளையம் மும்மூர்த்தி நகரை சேர்ந்தவர் சபியுல்லா (54). இவர் அச்சு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் ஊட்டிக்குச் சென்று, இன்று (ஏப்.5) காலை திரும்பினார்.
அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அங்கிருந்த 120 சவரன் நகை, 20 லட்சம் பணம் திருடு போனது தெரியவந்தது.
![பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 120 சவரன் நகை, 20 லட்சம் கொள்ளை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11288022_hhh.png)
இதனையடுத்து சபியுல்லா வீரபாண்டி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அவர் அளித்த புகாரின்பேரில், காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.12 லட்சம் தங்கம் பறிமுதல்!'