திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (17). இவர், 12ஆம் வகுப்பு முடித்து விட்டு கல்லூரி சேர்கைகாக வீட்டில் இருந்த நிலையில், கடந்த வாரம் திங்கள் கிழமை முதல் இவரைக் காணவில்லை என்று சிறுமியின் தாய் உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இப்புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில், முருகன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (23) என்ற இளைஞர் அக்கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி, காலணி தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியுடன் நட்பு பாராட்டி பின்னர், காதலிக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில், கடந்த வாரம் வீட்டில் தனியாக இருந்த சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி முருகன் கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த காவல் துறையினர், சிறுமியை கடத்திச் சென்ற இளைஞர் பாண்டியனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: அருப்புக்கோட்டை தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு