திருப்பத்தூர்: கொரட்டி தரைப்பாலம் வழியாக தண்டுகானூர், மாங்குப்பம், காரக்காரன்கொட்டாய், மங்களம் பள்ளி எனச் சுமார் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனர். வடகிழக்கு பருவமழை காரணமாக கொரட்டி நீரோடையில் தற்போது அதிக வெள்ளம் செல்வதால் தரைப்பாலம் உடைந்தது.
இதற்கிடையில் மாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் (35) கொரட்டி பகுதிக்கு தேநீர் அருந்த சென்றுள்ளார். அப்போது உடைந்த தரைப்பாலத்தில் கயிறு கட்டி இருந்ததை பிடித்து கொண்டு கடந்து சென்றுள்ளார்.
பிறகு தேநீர் அருந்திவிட்டு வீட்டிற்கு அதேபோல் சென்றுவிட்டார். பின்னர் தான் எடுத்து சென்ற குடையை தேநீர் கடையில் மறந்து வைத்து விட்டு வந்தது அவருக்கு தெரியவந்தது.
மீண்டும் கடைக்கு சென்றபோது தரைப்பாலத்தில் கட்டப்பட்டிருந்த கயிறு அவிழ்க்கப்பட்டிருந்தது. கயிறு இல்லாமல் தரை பாலத்தை கடக்க அவர் முயன்றுள்ளார்.
இதையடுத்து அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக அவர் அரை கிலோமீட்டர் தொலைவிற்கு அடித்துச் செல்லப்பட்டார். உடனே, சுதாரித்துக்கொண்ட பாண்டியன் அருகே உள்ள மரக்கிளையை பிடித்து மறுகரை வழியாக திரும்பி வந்தார்.
இதையும் படிங்க: Vellore House Collapse: வீடு இடிந்து 9 பேர் உயிரிழந்த பரிதாபம்