திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த புது கோவிந்தபுரம் மலையடியோரம் அருகே இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடப்பதாக, பொதுமக்கள் ஆம்பூர் நகர காவல் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற ஆம்பூர் நகர காவல் துறையினர் இளைஞரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஆம்பூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட இளைஞர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சீவூர் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கவியரசன் என்பதும், இவர் கடந்த சில ஆண்டுகளாக தனது அத்தை மகளான ஹேமப்பிரியா என்பவரைக் காதலித்துவந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் (பிப். 01) குடியாத்தம் பேருந்து நிலையத்தில் இருவரும் நீண்ட நேரம் பேசிவந்ததாகவும், தகவலறிந்து சென்ற ஹேமப்பிரியாவின் தந்தை இருவரையும் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த கவியரசன் மலையடிவாரப் பகுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காதல் தோல்வி காரணமாக இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:பெங்களூரு ஏடிஎம் தாக்குதல் குற்றவாளிக்கு 12 ஆண்டு சிறை