ETV Bharat / state

எண்ணெய் கேனை இடுப்பில் கட்டிக்கொண்டு நீச்சல் தெரியாமல் குளிக்கச் சென்ற இளம்பெண் மரணம் - எண்ணெய் கேனை இடுப்பில் கட்டிக்கொண்டு நீச்சல் தெரியாமல் குளிக்கச் சென்ற இளம் பெண் மரணம்

தன்னுடைய தம்பி உள்பட சக நண்பர்கள் கிணற்றுக்குள் குதித்து விளையாடும்போது தானும் நீச்சல் அடிக்க வேண்டும் என்கிற ஆர்வ மிகுதியில் எண்ணெய் கேனை இடுப்பில் கட்டிக்கொண்டு குளிக்க ஆரம்பித்த இளம்பெண் நீச்சல் அடிப்பதற்குத் தொந்தரவாக இருப்பதாகக் கருதி எண்ணெய் கேனை கழற்றி எறிந்துவிட்டு நீச்சல் அடித்துள்ளார். அதுதான் அவரது உயிருக்கே வினையானது.

நீச்சல் தெரியாமல் கிணற்றுக்குள் குளிக்கச் சென்ற இளம் பெண் மரணம்

author img

By

Published : Jan 10, 2022, 2:42 PM IST

திருப்பத்தூர்: கந்திலி ஒன்றியத்திற்குள்பட்ட கும்மிடிக்காம்பட்டி ஊராட்சி அனிகானூர் பகுதியில் வசிப்பவர் திருப்பதி. ஆட்டோ ஓட்டுநரான இவரது மகள் கலையரசி (18). அதே பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்புப் படித்துவந்த இவர் தன்னுடைய தம்பி செல்வம் (12), சக நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள கிணற்றுக்குக் குளிக்கச் சென்றுள்ளனர்.

இதனிடையே, தன்னுடைய தம்பி உள்பட சக நண்பர்கள் கிணற்றுக்குள் குதித்து விளையாடும்போது தானும் நீச்சல் அடிக்க வேண்டும் என்கிற ஆர்வ மிகுதியில் எண்ணெய் கேனை இடுப்பில் கட்டிக்கொண்டு குளிக்க ஆரம்பித்த கலையரசி நீச்சல் அடிப்பதற்குத் தொந்தரவாக இருப்பதாகக் கருதி எண்ணெய் கேணை கழற்றி எறிந்துவிட்டு நீச்சல் அடித்துள்ளார்.

இந்நிலையில் நீருக்குள் சென்ற கலையரசி மீண்டும் வெளியே வராததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தம்பி செல்வம் உள்பட சக நண்பர்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

நீச்சல் தெரியாமல் குளிக்கச் சென்ற இளம் பெண் மரணம்
நீச்சல் தெரியாமல் குளிக்கச் சென்ற இளம்பெண் மரணம்

இதனையடுத்து, தகவல் அறிந்த ஊர் பொதுமக்கள் திருப்பத்தூர் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த திருப்பத்தூர் தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்குப் பின்பு கலையரசியைச் சடலமாக மீட்டுள்ளனர்.

அதன் பின்பு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கந்திலி காவல் துறை சடலத்தைக் கைப்பற்றித் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். இளம்பெண் ஒருவர் கிணற்றுக்குள் நீச்சல் தெரியாமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மகள்களைப்பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும் - சென்னை ஐபிஎஸ் அலுவலரின் மகள் பாசம்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.