திருப்பத்தூர் மாவட்டம் பெரியகரம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் குடிநீர் வசதி கேட்டு காலிக் குடங்களுடன், திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கடந்த ஒரு வருட காலமாக ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கவில்லை எனக் குற்றஞ்சாட்டினர்.
சுமார் 20 நிமிடத்திற்கும் மேல் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனால் பேச்சு வார்த்தையில் உடன்படு ஏற்படாத நிலையில் தொடர் மறியலில் பெண்கள் ஈடுபட்டனர். பின்னர் கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார் சம்பவ இடத்திற்கு வந்து பெண்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: ஆலந்தூரில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் சாலை மறியல்