திருப்பத்தூர் மாவட்டம் ஹவுசிங் போர்டு அடுத்த சுந்தரம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தியாகு (36). இவர் கழிவறை சுத்தம் செய்யும் பணி செய்து வருகிறார்.
இவரிடம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம், அவரது மனைவி புவனேஸ்வரி (35) ஆகிய இருவரும் வேலை செய்து வந்துள்ளனர். புவனேஸ்வரிக்கு முதலாளி தியாகுவை பிடித்துப்போனதால் திருமணத்திற்கு மீறிய உறவு வைத்துள்ளார்.
இது வேலாயுதத்திற்கு தெரியவர, புவனேஸ்வரியை கைவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். புவனேஸ்வரி அடிக்கடி போதை மாத்திரை மற்றும் மருந்தை பயன்படுத்தி வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் தியாகு போதை மருந்தை பயன்படுத்தக்கூடாது என புவனேஸ்வரியிடம் தெரிவித்துள்ளார். மேலும் புவனேஸ்வரிக்கு பணம் கொடுக்காமல் தியாகு இருந்துள்ளார். போதை மருந்து இல்லாமல் மனமுடைந்த புவனேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் புவனேஸ்வரி உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்தார்களா என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குப்பை கிடங்கில் 7 மாத ஆண் சிசுவின் சடலம் கண்டெடுப்பு