ETV Bharat / state

மாவு மெஷினில் சிக்கிய துப்பட்டா.. பெண் நூலகர் மரணம்! - அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

வாணியம்பாடி அருகே அரவை மில் இயந்திரத்தில் சிக்கி பெண் நூலகர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரவை மில் இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

author img

By

Published : Nov 12, 2022, 2:44 PM IST

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் எதிரில் அதே பகுதியை சேர்ந்த முரளி தானிய வகைகள் அரைக்கும் ரைஸ் மில் வைத்து நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி கன்னிகா பரமேஸ்வரி இருணாப்பட்டு பகுதியில் நூலகத்தில் நூலகராக பணிபுரிந்து வந்துள்ளார்.

நேற்று விடுமுறை என்பதால் கன்னிகா பரமேஸ்வரி அரவை மில்லில் தானியங்களை அரைத்துக் கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக கன்னிகா பரமேஸ்வரியின் துப்பட்டா ரைஸ்மில் இயந்திரத்தில் சிக்கி தூக்கி வீசப்பட்டதில், கன்னிகா பரமேஸ்வரி இயந்திரத்தின் மீது மோதி தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆலங்காயம் காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நடு ரோட்டில் பாலியல் தொல்லை,கொடூர தாக்குதல்..! சென்னை பேராசிரியர் கைது..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.