ETV Bharat / state

கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற பெண் கைது - crime news

ஆம்பூர் அருகே வெளிமாநில மது பாட்டில்கள், பாக்கெட்டுகளை வீட்டில் பதுக்கி, கள்ளச்சந்தையில் விற்ற பெண்ணை கைதுசெய்த காவல் துறையினர், அவரிடமிருந்து 580 மது பாக்கெட்டுகளைப் பறிமுதல்செய்தனர்.

பெண் கைது
பெண் கைது
author img

By

Published : Jun 28, 2021, 8:13 AM IST

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த பாவர்தம்பட்டறை பகுதி குடியிருப்புப் பகுதியில், வெளிமாநில மதுபான பாட்டில்கள், பாக்கெட்டுகளைப் பதுக்கிவைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாகக் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் உமராபாத் காவல் ஆய்வாளர் நிர்மலா தலைமையிலான காவலர்கள் பாவர்தம்பட்டறை பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சாந்தராஜின் மனைவி மஞ்சுளா, தனது வீட்டின் பின்புறம் உள்ள ஓலைக் கொட்டகையில், வெளிமாநில மதுபான பாக்கெட்டுகளைப் பதுக்கி கள்ளச்சந்தையில் விற்பனை செய்தது தெரியவந்தது.

சோதனையில் 12 அட்டைப்பெட்டிகளில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த, 580 வெளிமாநில மதுபான பாக்கெட்டுகளை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: மகளுக்கு எலி பேஸ்ட் கொடுத்து கொலை செய்த தாய் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.