ETV Bharat / state

வாட்ஸ்அப் குழு உருவாக்கி மது விற்பனை: அட்மின்கள் இருவர் கைது!

மதுபானம் விற்பனை செய்வதற்காக சரக்கு என்ற பெயரில், தனியாக வாட்ஸ்அப் குழு உருவாக்கி மதுவிற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுவிற்க  வாட்ஸ் அப் குழு
ஆன்லைன் மதுவிற்பனை
author img

By

Published : Jun 1, 2021, 4:56 PM IST

திருப்பத்தூர்: கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு தளர்வில்லா ஊரடங்கை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களின் அத்தியாவசிய தேவைகளான காய்கறி - பழங்கள், மளிகைப் பொருட்கள் நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஊரடங்கில் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், குடிமகன்கள் சட்டவிரோத மது விற்பனை, கள்ளச்சாரயம் ஆகியவைகளை நாடி வருகின்றனர்.

மதுவிற்ற 10 பேர் கைது

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 10ஆம் தேதி முதல் இன்று (ஜூன்.1) வரை சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரயில், ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் மது விற்பனை செய்த 10க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுவிற்பனைக்கு வாட்ஸ் அப்

இந்தநிலையில், வாணியம்பாடியில் குடிமகன்களின் தேவையை தீர்க்க, நண்பர்கள் இருவர், சரக்கு என்ற வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி உறுப்பினர்கள் சேர்த்து, மதுவிற்பனை செய்து வந்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனன்(25), நியூ டவுன் பகுதியை சேர்ந்த அவரது நண்பர் சரவணன்(24). இவர்கள் இருவரும் இந்த குழுவில் சுமார் 150-க்கும் அதிகமானவர்களை இணைத்து, அதன் மூலம், ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மது விற்பனை செய்து வந்துள்ளனர்.

வாய்ஸ் மெசேஜில் விற்பனை

இதில் வெளிமாநில மது வகைகள், கள்ளச்சாராயம் உட்பட அனைத்தையுமே சலுகை விலையில் தந்துள்ளனர். மதுபானம் வாங்க விரும்புவோர், வாய்ஸ் மெசேஜ் மூலமாக சரக்கு குழுவில் பதிவு செய்ய வேண்டும். உடனடியாக, குரூப் அட்மின் மற்றும் குழு உறுப்பினர்கள் தங்களிடமுள்ள மதுபானங்களின் விவரம் மற்றும் விலையை வாய்ஸ் மெசேஜ்-ஆக பதிவு செய்கிறார்கள்.

ரகசிய இடத்தில் பரிமாற்றம்

ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மதுபானத்தைப் பெற்றுக் கொள்ள, குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்து, அங்கு சென்று மதுவைப் பெற்றுக் கொள்ளலாம் என குரூப் அட்மின் தகவல் தெரிவிக்கிறார். பின்னர், சரக்கு கைமாறுகிறது.

இந்நிகழ்வுகள் குறித்து, தகவல் அறிந்த வாணியம்பாடி நகர காவல் துறையினர், வாட்ஸ் அப் குழு அட்மின்களான ஜானர்தனன் மற்றும் சரவனணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆன்லைன் மது விற்பனை: தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.