ETV Bharat / state

'சாதிய ரீதியாக பேசுவதாக வழக்குத்தொடர்வேன்' - எச்சரித்த விசிக மாவட்டச் செயலாளர்

திருப்பத்தூரில் ”சாதிய ரீதியாக பேசுவதாக வழக்குத்தொடர்வேன்” என வருவாய் கோட்டாட்சியருக்கு விசிக மாவட்டச் செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

”சாதிய ரீதியாக பேசியதால் வழக்கு தொடர்வேன்”- விசிக மாவட்ட செயலாளர்!

author img

By

Published : Dec 20, 2022, 9:42 PM IST

”சாதிய ரீதியாக பேசியதால் வழக்கு தொடர்வேன்”- விசிக மாவட்ட செயலாளர்!

திருப்பத்தூர்: தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர் பிடிப்புப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ள குடியிருப்புப் பகுதிகளை அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, திருப்பத்தூர் அடுத்த பொன்னியம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புப் பகுதிகளை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

இதனைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் அரசு சார்பில் மாற்று இடம் கொடுத்த பின்பு காலி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது விசிக மாவட்டச்செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் பேசிக்கொண்டிருந்த போது வருவாய் கோட்டாட்சியர் பேசும்பொழுது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது பேசிய விசிக மாவட்டச் செயலாளர் சுபாஷ் சந்திர போஸ், `சாதிய ரீதியாக எங்களை நடத்துகிறீர்கள் என்று வழக்குத் தொடர்வேன்; நீங்கள் சார் ஆட்சியராக இருந்தாலும் பரவாயில்லை’ என்று எச்சரிக்கை விடுத்தார். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

இதனைத்தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் சமரசம் பேசி 10 நாட்களுக்குள் தகுதியானவர்களுக்கு மாற்று இடம் கொடுத்து பட்டா வழங்குகிறோம் என்று கூறியதன் பிறகு பதற்றம் தணிந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தின்போது பாதுகாப்பு பணியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:யார் பெரிசு? - ஓபிஎஸ் அறிவிப்புக்குப்பின் மா.செ. கூட்டத்தை அறிவித்த ஈபிஎஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.