ETV Bharat / lifestyle

மல்லிகை செடியில் கொத்து கொத்தா பூ பூக்கணுமா? வாரத்திற்கு ஒருமுறை 'இதை' ஸ்ப்ரே பண்ணுங்க! - HOW TO GROW JASMINE PLANT

புளித்த தயிர் மற்றும் தேங்காய்யை அரைத்து வாரத்திற்கு ஒரு முறை மல்லிகைச் செடி மீது தெளித்து வந்தால், ஒரே மாதத்தில் மல்லிகை செடியில் பூ பூத்துக்குலுங்கும். இது போன்ற டிப்ஸ்களை பார்க்கலாம் வாங்க..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty Images)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Nov 19, 2024, 12:56 PM IST

வீடுகளில் செடி வளர்க்க விரும்புபவர்களின் முதல் சாய்ஸாக இருப்பது பூச்செடிகள் தான். அதிலும், மல்லிச்செடி வளர்க்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால், மல்லிச்செடிகள் நட்டு வைத்த பின், ஒரு வருடமானாலும், துளிர் கூட விடாமல் இலைகள் மட்டும் அப்படியே இருக்கும். பூ பூக்க வைப்பதற்கு, நாம் என்ன செய்தாலும் பயன் இல்லாமல் போகும். இப்படியான சூழ்நிலையில், இயற்கையான இந்த பொருட்களை வைத்து தயாரிக்கும் இந்த உரங்களை செடிக்கு போட்டு பாருங்கள். மல்லிச்செடியில் பூக்கள் பூத்துக்குலுங்குவது நிச்சயம்!

மல்லிகை செடி உரங்கள்:

உரம் 1: புளித்த தயிரும், தேங்காய்யும்!

  • முதலில், ஒரு கப் புளித்த தயிரை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மோராக அரைத்துக்கொள்ளுங்கள். இப்போது, இந்த புளித்த மோரை ஒரு வாட்டர் பாட்டலில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
  • அடுத்ததாக, அதே மிக்ஸி ஜாரில் நறுக்கி வைத்த ஒரு மூடி தேங்காய் துண்டுகளை சேர்த்து தண்ணீர் ஊற்றி மையாக அரைத்து, மோர் ஊற்றி வைத்த அதே பாட்டலில் சேர்க்கவும்.
  • இதை, சூரிய வெளிச்சம் நேரடியாக படாத இடத்தில் ஒரு வாரத்திற்கு வைக்க வேண்டும். இந்த கரைசலில் மேற்படியாக தண்ணீர் ஊற்ற வேண்டாம். ஒரு வாரத்திற்கு பின்னர், இந்த கரைசலில் ஒரு பங்கு எடுத்து, செடிகளுக்கு உரம் கொடுக்கக்கூடிய ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி அதனுடன் 5 பங்கு தண்ணீர் ஊறி நன்கு கலந்து விடவும்.
  • இந்த கரைசலை இலை,செடி,வேர்ப்குதி என மல்லிகை செடியுடைய அனைத்து பகுதிகளிலும் வாரத்திற்கு ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறையென ஸ்ப்ரே செய்து வந்தால் மல்லிகை செடி துளிர் விட்டு, பூக்கள் கொத்து கொத்தாக பூக்கும்.

இதையும் படிங்க: வீட்டில் கறிவேப்பிலை செடி தளதள வென்று வளரணுமா? 'இந்த' இரண்டையும் வாரத்திற்கு ஒரு முறை தெளிங்க!

உரம் 2: பூண்டுத் தோலும், வெங்காயத்தோலும்!

  • தினத்தோறும், நாம் தலை அல்லது பூஜை அறையில் வைக்கும் பூக்கள் மல்லிகை செடிக்கு சிறந்த உரமாக இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அதுமட்டுமல்லாமல், நாம் குப்பை என நினைத்து தூக்கி போடும், பூண்டு தோல்,வெங்காயத்தோல் தான் உரத்திற்கான முக்கிய பொருட்களாகவே இருக்கிறது.
  • இந்த உரத்திற்கு, முதலில், பூண்டு தோல்,வெங்காயத்தோல் மற்றும் பூக்களின் இதழ்களை வெயிலில் நன்கு காயவைக்க வேண்டும். பின்னர், இவற்றை தனித்தனியாக மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
  • இப்போது, அரைத்து வைத்த மூன்றையும், சம அளவு எடுத்து கலந்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த பவுடரை வாரத்திற்கு ஒரு முறை, ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் பூச்செடி நட்டு வைத்துள்ள் மண்ணில் சேர்த்து கிளறி தண்ணீர் ஊற்றி வாருங்கள். பூக்கள் நன்கு பூத்துக்குலுங்கும். இந்த இரண்டு உரங்களையும் மல்லிகை செடிகளுக்கு மட்டுமல்லாமல், மற்ற செடிகளுக்கும் பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க:

வெற்றிலை கொடி செழிப்பாக வளர 'இந்த' மண்ணில் நட்டு வையுங்கள்..பெரிய இலைகள் நிச்சயம்!

இனி அதிர்ஷ்டத்திற்கும் பணத்திற்கும் பஞ்சமே இருக்காது..இந்த 6 செடிகளை வளர்த்து பாருங்க!

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.