திருப்பத்தூர்: வரும் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அப்பகுதி போலீசார் சார்பில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.
இந்த ஊர்வலத்திற்கு வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் தலைமை தாங்கினார். பொன்னியம்மன் கோயில் திடலில் இருந்து புறப்பட்டு திருவள்ளுவர் வீதி, அம்பூர் பேட்டை, கச்சேரி சாலை, ஆசிரியர் நகர், காதர்பேட்டை, பஸ் நிலையம், சி.எல். ரோடு, முகமது அலி பஜார் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் பொன்னியம்மன் கோயில் திடலில் போலீசார் முடித்தனர்.
அப்போது பேசிய காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன், "விநாயகர் சதுர்த்தி அன்று சிலைகள் வைக்கப்படும் இடங்களில் தகுந்த பாதுகாப்பு பணிகளில் போலீசார் ஈடுபட வேண்டும். அதைத்தொடர்ந்து விநாயகர் ஊர்வலம் நடைபெறும் அன்று பொதுமக்களுக்கு எவ்வித இடையூரும் இல்லாத வகையில் சிலைகளை எடுத்துச் செல்ல தேவையான பாதுகாப்புகள் வழங்க வேண்டும்.
இதையும் படிங்க: TODAY HOROSCOPE ஆகஸ்ட் 29 இன்றைய ராசிபலன்