திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலாவாடி கவுண்டப்பனூர் கிராம மக்கள் கரோனாவை விரட்ட ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் சிறப்பு வழிபாடு செய்தனர்.
உலகமெங்கும் தர்மங்கள் அழிந்து, அதர்மங்கள் தலைதூக்கி தாண்டவமாடி சீரழிந்துவரும் உலகத்தை நிலை நிறுத்த உலக அமைதி நன்மைக்காகவும், மழை நன்றாக பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என்றும், கவுண்டப்பனூர் கிராமத்தில் உள்ள ஊர் பொதுமக்கள், மக்கள் சார்பில் மிக பிரசித்தி பெற்ற மகா சக்தி மாரியம்மனுக்கு பட்டு சீர்வரிசை ஏந்தி, கோயிலில் ஹோமங்கள் வளர்த்து கலசங்கள் மூலம் வழிபாடு செய்தனர்.
திருப்பத்தூர் கிராம மக்கள் புனித நீராடி மகாசக்தி மாரியம்மனை குளிர வைத்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை செய்து வழிபட்டனர். மேலும், அன்னதானம் வழங்கப்பட்டது. 500-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.