திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், வருவாய் துறை அலுவலக உதவியாளர்களுக்கு வழங்கக்கூடிய இணையான ஊதியத்தை கிராம உதவியாளர்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர்கள் சங்க திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் ரத்தத்தில் கையெழுத்திட்டனர். ரத்தத்தில் கையெழுத்திட்ட மனுக்களை முதலமைச்சருக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர்.
மேலும், வரும் 24ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம உதவியாளர்களும் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் அறிவித்துள்ளனர்.