ETV Bharat / state

நாயக்கனேரி விவகாரம்; விசிகவினருக்கு கொலை மிரட்டல் கடிதம்.. போலீசில் புகார்!

VCK: நாயக்கனேரி விவகாரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு கொலை மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அக்கட்சியினர் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பட்டியலின பெண் தலைவர் இந்துமதிக்கு ஆதரவு தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு கொலை மிரட்டல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 29, 2023, 10:23 AM IST

பட்டியலின பெண் தலைவர் இந்துமதிக்கு ஆதரவு தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு கொலை மிரட்டல்!

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த நாயக்கனேரியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பெண் தலைவர் மற்றும் வன்னியநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின பெண்ணிற்கு ஆதரவு தெரிவித்ததாகக் கூறி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி ஊராட்சி மன்ற பட்டியலின பெண் தலைவரான இந்துமதிக்கு உடனடியாக பதவி பிரமாணம் செய்து வைக்கக் கோரி, அவருக்கு ஆதரவு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

அதேபோல், வன்னியநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பாண்டுரங்கன் என்பவர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்துள்ள நிலையில், அவரை வன்னியநாதபுரம் கிராம மக்கள் ஊரில் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்கக் கூடாது என கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: கரூரில் போலி ஆவணங்களை வைத்து பாஸ்போர்ட் பெற்ற இலங்கைத் தமிழர் கைது!

இதனைத் தொடர்ந்து பாண்டுரங்கன் வீட்டில் ஏற்பட்ட துக்க நிகழ்ச்சியில் ஊர் மக்கள் யாரும் பங்கேற்காத நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி அந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றது. மேலும், அக்கட்சியினர் வன்னியநாதபுர பஞ்சாயத்து நிர்வாகிகள் மீது உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து பட்டியலின பெண்களுக்கு ஆதராவக செயல்பட்டதற்காகவும், தங்கள் சமூகத்தைச் சேர்ந்த கிராம மக்கள் மீது புகார் அளித்ததாக கூறியும், திருப்பத்தூர் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்டச் செயலாளர் ஓம்பிரகாஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த நபர்களை ஆபாசமாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில் கொலை மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: அம்பத்தூரில் போலீசாரை தாக்கிய சம்பவம்; விடிய விடிய நடந்த அதிரடி நடவடிக்கை.. இதுவரை 28 வடமாநிலத்தவர்கள் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.