ETV Bharat / state

உணவு, உறைவிடத்திற்கு தவிப்பு: 16 ஆதரவற்றோரை மீட்ட போலீசார்! - வாணியம்பாடி போலீசார்

பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம் பகுதிகளில் ஆதரவற்று சுற்றித் திரிந்தவர்களை மீட்ட போலீசார், அவர்களை கருணை இல்லத்தில் சேர்த்து உணவு மற்றும் உடமைகள் வழங்கினர்.

ஆதரவற்றவர்கள் மீட்பு
ஆதரவற்றவர்கள் மீட்பு
author img

By

Published : Dec 3, 2022, 9:50 PM IST

திருப்பத்தூர்: வாணியம்பாடி நகரப் பகுதியில் ஆதரவற்றோர் பலர் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. வாணியம்பாடி பேருந்து மற்றும் ரயில் நிலையம், பஜார் பகுதி, மசூதி, கோயில் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில், ஆதரவற்று சுற்றித் திரிந்த 7 ஆண்கள், ஐந்து பெண்கள், சிறுமி உள்பட 4 குழந்தைகள் என மொத்தம் 16 பேரை போலீசார் மீட்டனர். பின்னர் அவர்களை வாணியம்பாடி பெருமாள் பேட்டை பகுதியில் உள்ள கருணை இல்லத்தில் ஒப்படைத்த போலீசார் அவர்களுக்கு உணவு மற்றும் உடமைகளை வழங்கினர்.

இதையும் படிங்க: இளைஞரை மரத்தில் கட்டிவைத்து அடித்துக் கொன்ற கொடூரம்.. திருச்சியில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.