திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த சாலை நகர் பகுதியில் லாரி மோதி 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். ஆசிரியர் நகர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் சஞ்சய்(23) மற்றும் மூக்கனூர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் பிரகாஷ் (29) ஆகிய இருவரும் சவுண்ட் சர்வீஸ் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இருவரும் பால்நாங்குப்பம் பகுதியில் அமைந்துள்ள நந்தினி திருமண மண்டபத்திற்கு சவுண்ட் சர்வீஸ் அமைக்க சென்ற நிலையில் தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் பகுதியைச்சேர்ந்த ராகுல் என்பவர் தர்மபுரியிலிருந்து வேலூர் நோக்கி லாரியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரி மோதியதில் சஞ்சய் மற்றும் பிரகாஷ் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் சம்பவம் அறிந்து வந்த ஜோலார்பேட்டை காவல் துறையினர் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து ஜோலார்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: விவசாயி கொலையில் திடீர் திருப்பம்: காவல் உதவி ஆய்வாளர் கைது!