திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த காட்டுக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் சாவித்திரி (65). இவரும், வளையாம்பட்டு பகுதியைச் சேர்ந்த இவரது சகோதிரியான வசந்தா (64) என்பவரும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டின் காரிய நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆம்பூர் ரயில் நிலையம் வந்துள்ளனர்.
பின்னர், ரயில் நிலையத்தில் டிக்கெட் பெற்றுக் கொண்டு, ஜே.பி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் திருவள்ளூர் செல்வதற்காக ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்று உள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக, அவ்வழியாக சென்ற மங்களூரு விரைவு ரயில் மோதி சகோதரிகள் இருவரும் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: சென்னை புறநகரில் அக்டோபர் 24ஆம் தேதி மின்சார ரயில் சேவைகள் ரத்து! கண்டிப்பா படிங்க! அப்புறம் கஷ்டப்படாதிங்க!
இந்நிலையில், விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜோலார்பேட்டை காவல் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: புதுச்சேரி அமைச்சரவையில் இருந்து சந்திர பிரியங்கா நீக்கம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசிதழில் வெளியீடு!