திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஊசி தெருவைச்சேர்ந்தவர், அமானுல்லா. இவர் வாணியம்பாடி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த போது, வீட்டின் உள்ளே இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்ற அவர் உணவு முடிந்து கடைக்குத் திரும்பிச்செல்ல வந்து பார்த்தபோது இரு சக்கர வாகனம் கொள்ளைபோனது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அமானுல்லா, வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகளை வைத்து புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட வாணியம்பாடி நகர காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து அடையாளம் தெரியாத நபரைத்தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தனியார் பேருந்தில் பாலியல் துன்புறுத்தல்: இன்ஸ்டாகிராமில் பெண்ணின் பதிவால் அதிர்ச்சி!