ETV Bharat / state

'பாட்டி, அத்தையின் சித்ரவதை...' - வீட்டைவிட்டு வெளியேறிய பிஞ்சுக் குழந்தைகள் - Civilians who rescued orphaned children

திருப்பத்தூர்: பாட்டி மற்றும் அத்தையின் சித்ரவதை தாங்காமல் வீட்டை விட்டு வெளியேறிய குழந்தைகளை பொதுமக்கள் காவல் துறையிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

childrens
childrens
author img

By

Published : Mar 12, 2020, 6:18 PM IST

Updated : Mar 12, 2020, 7:15 PM IST

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள கர்நாடக எல்லைப்பகுதியான, தும்கூர் குடிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த மது-அம்பிகா தம்பதியரின் குழந்தைகள் பத்மா (10), விஜய் (6). இவர்கள் இருவரும் வாணியம்பாடி அருகே உள்ள தனது பாட்டி வீட்டில் வளர்ந்து வந்ததாகத் தெரிகிறது. பாட்டி முனியம்மா, அத்தை மஞ்சு ஆகியோர் குழந்தைகளை வேலை செய்யச் சொல்லி, சித்ரவதை செய்ததால் குழந்தைகள் இருவரும் அங்கிருந்து தப்பித்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

வீட்டை விட்டு வெளியேறிய பிஞ்சுக் குழந்தைகள் எங்கே செல்வது என்று தெரியாமல், வாணியம்பாடி அடுத்த செக்குமாடு பகுதியில் உள்ள உணவகம் அருகே சுற்றி திரிந்துள்ளனர். பசியால் சுற்றித் திரிந்த குழந்தைகளைக் கண்ட அப்பகுதி மக்கள் அவர்களிடம் விசாரித்துள்ளனர். இதனையடுத்து அக்குழந்தைகள் பத்மா, விஜய் ஆகிய இருவரையும் காவல் துறையிடம் பொதுமக்கள் விட்டுச்சென்றனர்.

இதனையடுத்து, வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் குழந்தைகள் இருவரையும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம் ஒப்படைத்தனர். பின்னர் வாணியம்பாடியில் உள்ள கருணை இல்லத்தில் குழந்தைகளை ஒப்படைத்த மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் குழந்தைகளை சித்ரவதை செய்த பாட்டி முனியம்மா, அத்தை மஞ்சு ஆகியோரைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ராஜ்ய சபா தேர்தல் - அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல்!

Last Updated : Mar 12, 2020, 7:15 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.