ETV Bharat / state

ஆட்சியர் போல் பேசி ரூ.50 ஆயிரம் மோசடி முயற்சி - சைபர் கிரைம் விசாரணை - ஆட்சியர் போல் பேசி ரூ.50 ஆயிரம் மோசடி

வாணியம்பாடியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் போல் பேசி 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ய முயன்ற நபர் குறித்து சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சைபர் கிரைம் விசாரணை
சைபர் கிரைம் விசாரணை
author img

By

Published : Aug 21, 2021, 11:08 PM IST

திருப்பத்தூர்: வாணியம்பாடி அம்பூர்பேட்டை பொன்னி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஶ்ரீதர்; ரியல் எஸ்டேட் தொழிலாளியான இவர் சொந்தமாக ஒரு திருமண மண்டபம் வைத்துள்ளார்.

ஸ்ரீதரின் செல்போனிற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொடர்பு கொண்டு, தன்னை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹாவின் உதவியாளர் என அறிமுகப்படுத்தியுள்ளார்.

திருமண மண்டப உரிமையாளர் ஸ்ரீதர்
திருமண மண்டப உரிமையாளர் ஸ்ரீதர்

தொடரந்து, ஆட்சியரைபோல பேசி, வரும் 28ஆம் தேதி வியாபார சங்க கூட்டம் நடத்த திருமண மண்டபம் வாடகைக்கு வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

காவல் துறையினரிடம் புகார்

பின்னர், ஒரு உதவி செய்யவேண்டும் எனக் கேட்ட அவர், தனியார் வங்கி கணக்கு எண் ஒன்றை அனுப்பி அவசரமாக இந்த எண்ணிற்கு 50 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்புமாறு கேட்டுள்ளார்.

வங்கி கணக்கு எண்
வங்கி கணக்கு எண்

கூட்டம் முடிந்து வாடகை பணத்துடன், இந்த தொகையையும் கொடுத்து விடுவதாக தெரிவித்துள்ளார். இதனால், சந்தேகமடைந்த ஶ்ரீதர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, இது குறித்து விசாரித்துள்ளார்.

அப்போது அவருக்கு உண்மை தெரியவர உடனடியாக இந்த சம்பவம் குறித்து ஸ்ரீதர் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலுள்ள சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.

காவல் துறை விசாரணை

புகாரில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர், ஆட்சியர் உதவியாளர் போல் பேசி பணத்தை மோசடி செய்ய முயற்சி செய்தவர் கொடுத்த வங்கி கணக்கு, செல்போன் எண் ஆகியவற்றை கொடுத்து, அந்நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

ஸ்ரீதர் அளித்த புகார்
ஸ்ரீதர் அளித்த புகார்

இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி உத்தரவின் பேரில், வாணியம்பாடி துணை கண்காணிப்பாளர் பழனி செல்வம் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நிலம் வாங்கித் தருவதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி - ரியல் எஸ்டேட் அதிபர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.